வவுனியாவில் முச்சக்கரவண்டியை மோதித்தள்ளிய ரயில்; ஸ்தலத்தில் பறிபோன உயிர்!


வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து திருநாள்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, கொழும்பு – யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் சம்பவ இடத்திலேயே குறித்த வயோதிப பெண் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.