அஸ்வெசும நலத்திட்டத்தின் முதியோருக்கான ஏப்ரல் மாத கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!


அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் முதியோருக்கான ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று (22) பயனாளர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 617,406 பயனாளர்களுக்கு மொத்தமாக 3.087 பில்லியன் ரூபாய் வழங்கப்பட உள்ளது. மேலும், இரண்டாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 72,525 பயனாளர்களுக்கு 362.6 மில்லியன் ரூபாய் கொடுப்பனவாக வழங்கப்பட உள்ளது.

பயனாளர்கள் தங்களது வங்கி கிளைகளுக்குச் சென்று அல்லது கணக்குகள் மூலம் இந்த கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். பண்டிகை கால செலவுகளை கருத்தில் கொண்டு, இந்த நிதி தாமதமின்றி வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.