இலங்கையில் கடந்த ஒரு தசாப்தத்தில் உயர் கல்வி பெற்றோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையில் கடந்த ஒரு தசாப்தத்தில் உயர் கல்வி பெற்றோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக, 2024 மக்கள் மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பில் 25 வயதுக்கு மேற்பட்ட மக்களை அடிப்படையாகக் கொண்ட தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் பின்வருமாறு:
- PhD பட்டதாரிகள் – 2012ஆம் ஆண்டு 6,557 ஆக இருந்தது 2024ஆம் ஆண்டில் 11,757 ஆக உயர்ந்துள்ளது (மொத்த மக்கள் தொகையில் சுமார் 0.1%).
- பட்டப்படிப்பு பெற்றோர் – 358,052 (3.0%) இலிருந்து 780,958 (5.6%) ஆக இரட்டிப்பிற்கு நெருங்கிய அளவில் அதிகரித்துள்ளது.
- உயர் கல்வி பெற்றோர் (மொத்தம்) – 2,195,117 (18.2%) இலிருந்து 3,635,462 (26.2%) ஆக உயர்ந்துள்ளது.
- A/L அல்லது சமமான தகுதி பெற்றோர் – 1,724,574 (14.2%) இலிருந்து 2,677,022 (19.4%) ஆக அதிகரித்துள்ளனர்.
- இரண்டாம் நிலைக் கல்வி பெற்றோர் – 7,079,569 இலிருந்து 8,096,402 ஆக உயர்ந்து, மொத்தத்தில் சுமார் 58% ஆக காணப்படுகின்றனர்.
- அடிப்படை கல்வி மட்டும் பெற்றோர் – 2,214,792 (18.4%) இலிருந்து 1,738,942 (12.5%) ஆகக் குறைந்துள்ளனர்.
- கல்வி பெறாதோர் – 561,163 (4.7%) இலிருந்து 400,511 (2.9%) ஆகத் தாழ்ந்துள்ளது.
இந்த தரவுகள், இலங்கையில் கல்வி நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையும், குறிப்பாக உயர்கல்வி அணுகலில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதையும் தெளிவுபடுத்துகின்றன.
Tags:
இலங்கை செய்தி

