ஜப்பானில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!


ஜப்பானின் வடக்கு பிராந்தியத்தில் இன்று (27) அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவில் உள்ள சரபெட்சு நகரத்திற்கு மேற்கே சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 81 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் அல்லது கட்டிட சேதம் தொடர்பான உடனடி தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. ஜப்பான் வானிலை ஆய்வு நிலையம் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு ஜப்பானில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், வடகிழக்கு கடலோர பகுதிகளில் பெரிய அளவிலான “மெகா” நிலநடுக்கம் ஏற்படலாம் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பதிவாகியுள்ள 6.2 ரிக்டர் நிலநடுக்கம் மக்கள் மத்தியில் சிறிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலைமை சீராக உள்ள போதிலும், மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.