கத்தாரில் அமைந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய LNG கேஸ் ஆலையின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!


கத்தாரில் அமைந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய LNG கேஸ் ஆலையின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

இதில் அந்த ஆலை தீப்பற்றி எரிந்து கடும் சேதத்தை எதிர்கொண்டுள்ளது. கத்தாரின் வருமானத்தில் இந்த கேஸ் ஆலை மிகவும் முக்கிய பங்காற்றி வரும் நிலையில் ஈரான் அதனை டார்க்கெட் செய்துள்ளது.

இதனால்  கத்தார், ஈரானுக்கு எதிராக Persona Non Grata அறிவிப்பை வெளியிட்டதோடு, இனி கத்தாரை காக்க தேவையான நடவடிக்கையை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் ஈரான் – கத்தார் இடையேயான மோதல் உச்சமடைந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தீவிரமாக போரை தொடங்கி உள்ளன. இந்நிலையில் தான் ஈரானின் முக்கிய வருவாய் ஆதாரமாக இருக்கும் எல்பிஜி கேஸ் உற்பத்தி செய்யும் தெற்கு பார்ஸ் வயல் மீது இஸ்ரேல் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இந்த எல்பிஜி கேஸ் வயல் ஈரானின் தெற்கு புேஷர் மாகாணத்தின் அசலூயே என்ற பகுதியில் அமைந்துள்ளது. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய எல்பிகே கேஸ் வயலாகும். ஈரானின் வருமானத்தை முடக்கும் வகையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய கேஸ் ஆலை இதனால் சினம் கொண்ட ஈரான் மீண்டும் அரபு நாடுகள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

அதன்படி கத்தார் நாட்டை குறிவைத்து ஈரான் அடிக்கிறது. கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் ராஸ் லஃபான் எனும் தொழில்துறை நகர் அமைந்துள்ளது.

அங்கு கத்தார் நாட்டுக்கு சொந்தமான உலகிலேயே மிகப்பெரிய LNG கேஸ் ஆலை உள்ளது.

ஈரானில் இருந்து 5 ஏவுகணைகள் இந்த ஆலையை நோக்கி ஏவப்பட்டுள்ளது. அதில் 4 ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து கத்தார் அழித்தது. ஆனால் இன்னொரு ஏவுகணை LNG ஆலையின் வளாகத்தில் விழுந்தது.

இதனால் ஆலை தீப்பற்றி எரிந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் கூட ஆலையில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

கத்தார் போட்ட உத்தரவு இந்நிலையில் தான் ஈரான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட அனைவரையும் Persona Non Grata என கத்தார் அறிவித்துள்ளது.

இதற்காக அர்த்தம் என்னவென்றால் விரும்பத்தகாத நபர் என்பதாகும். பொதுவாக ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு தாக்குதல் நடத்தும்போது பாதிக்கப்பட்ட நாடு தங்களுக்கான எதிரி நாட்டின் தூதரை அழைத்து வார்னிங் செய்து அங்கிருந்து வெளியேற்றும் முறை தான் இதுவாகும்.

அந்த வகையில் ஈரான் தாக்குதலால் கோபமான கத்தார் தற்போது தூதரகத்தில் உள்ள ஈரான் ராணுவம் மற்றும் அதிகாரிகளை வெளியேறும்படி கூறியுள்ளது.