யாழ் வரும் ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள்! செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட ஏற்பாடு!


யாழ்ப்பாணத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பிரதிநிதிகள் அடங்கிய குழுக்கள் வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 26 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் வரவுள்ளதாகவும், அவர்கள் அங்கு பல தமிழ்க் கட்சித் தலைவர்களை சந்தித்து முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியம் பிரதிநிதிகள் குழு ஏப்ரல் 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளது. அந்தக் குழுவில் நோர்வே, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ருமேனியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இணைந்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பயணத்தின் போது, ஐரோப்பிய ஒன்றியம் குழுவினர் செம்மணியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழி தொடர்பான இடத்தையும் நேரில் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.