சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு!
மத்திய கிழக்கின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி அளவைக் குறைத்துள்ளதை அடுத்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளது.
இதன்படி, ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள போர் நடவடிக்கைகள் காரணமாக, உலகின் மிக முக்கியமான கடல் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலடியாகவே பிரதான எண்ணெய் உற்பத்தி நாடுகள் இந்த உற்பத்திக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
அதன்படி
பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 18% உயர்வைக் கண்டுள்ள நிலையில், ஒரு பீப்பாய் 108.68 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய்: சுமார் 20% உயர்ந்து, ஒரு பீப்பாய் 108 டொலராக அதிகரித்துள்ளது.
இந்த திடீர் விலை உயர்வு காரணமாக ஏனைய நாடுகளிலும் எரிபொருள் விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
