ஈரானிய கடற்படையினரின் சடலங்களை ஒப்படைக்குமாறு உத்தரவு!
காலி தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை ஈரானிய தூதரக அதிகாரிகளுக்கு ஒப்படைக்க காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட இன்று (மார்ச் 11) காலை காலி தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
காலி துறைமுகப் பொலிஸாரால் காலி பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
