மால்டாவின் துணைப் பிரதமருடன் அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு!


இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், மால்டா நாட்டின் துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இயன் போர்க்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்தியாவின் புது டில்லியில் நடைபெற்று வரும் 'ராய்சினா கலந்துரையாடல்' (Raisina Dialogue 2026) மாநாட்டின் ஒரு கட்டமாக,

இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. 

குறிப்பாக கடல்சார் ஒத்துழைப்பு, சுற்றுலாத்துறை, விசா வசதிகள், இருதரப்பு ஆலோசனைகள் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கை மற்றும் மால்டா ஆகிய நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதில் இரு நாடுகளும் உறுதியாக இருப்பதாக இந்தச் சந்திப்பின் முடிவில் மீள உறுதிப்படுத்தப்பட்டது.