100 டொலரைத் தொட்டது கச்சா எண்ணெய் விலை!
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலரை கடந்துள்ளது.
புதன்கிழமை வர்த்தக முடிவில், சர்வதேச சந்தையில் பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெயின் விலை 8.7% அதிகரித்து, ஒரு பேரல் 100 டொலர் எல்லையைத் தொட்டுள்ளது.
அதேவேளை, அமெரிக்காவின் WTI மசகு எண்ணெய் விலையும் 8.7% உயர்ந்து, பீப்பாய் ஒன்றின் விலை 94.8 டொலராக பதிவாகியுள்ளது.
உலகளாவிய எரிபொருள் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், சர்வதேச எரிசக்தி முகமையின் உறுப்பினர்களான G7 நாடுகள் தங்களின் கையிருப்பிலிருந்து 400 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை சந்தைக்கு விடுவதற்கு உடன்பட்டுள்ளன.
எனினும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தால் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகளே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
Tags:
உலகம்
.webp)