கண்டியின் சில பகுதிகளுக்கு நாளை நீர்வெட்டு!
கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (08) காலை 6.00 மணி முதல் மறுநாள் (09) அதிகாலை 4.00 மணிவரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, அஸ்கிரிய, வெகிரிய, பல்லேமுல்ல, யடிஹலகல, மடவெல ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.
மேலும் கஹவத்த, குருகொட, கிரிகடுவ, கஹல்ல, நுகவெல ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடை படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
