லாவ்ஸ் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தது!


இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி எரிவாயு இன்று காலை கப்பல் மூலம் நாட்டை வந்தடைந்தாக லாவ்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சினர் தொரஜா என்ற கப்பல் மூலம் குறித்த எரிவாயு நாட்டை வந்தடைந்துள்ளது.

அதன்படி, இன்று முதல் உடனடியாக சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கப்படும்.

உள்நாட்டு வாடிக்கையாளர்கள் இன்று முதல் வழமை போல் எரிவாயு விற்பனை முகவர்கள் மூலம் தேவையான எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்ய முடியும் என லாவ்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.