பாடசாலை மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் வழங்கும் கால எல்லை நீடிப்பு!
2026 ஆம் ஆண்டிற்கான 3,000 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் இல்லற மற்றும் துறவற மாணவர்கள் மற்றும் சீலமாதாக்களுக்கு வழங்கும் பாதணி வவுச்சர்களே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் 28ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த போதிலும், தற்போது அதன் செல்லுபடியாகும் காலம் அடுத்த மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
