நடிகர் ஹேமல் ரணசிங்கவுக்கு பிணை!


நபரொருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இன்று காலை கைதுசெய்யப்பட்ட நடிகர் ஹேமல் ரணசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தலா ரூ. 100,000 சரீரப் பிணையில் விடுவிக்க கல்கிஸ்ஸை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



குறித்த வழக்கு மே மாதம் 14ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.