மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி!
மாவனல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்- பஸ் மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் மோட்டர் சைக்கிளிலுடன் எதிர் திசையில் வந்த தனியார் பஸ் ஒன்று மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த இளைஞர் மாவனல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹிங்குல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் எனப் பொலிஸார் தெரவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மாவனல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Tags:
இலங்கை செய்தி
