சில மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!
சப்ரகமுவ மாகாணத்திற்கும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் இன்று (03) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கையொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், அந்தப் பிரதேசங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் அறிவித்துள்ளது.
இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும்போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
