50,000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் ஏற்பட்ட டித்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளில் 70 சதவீதமான வீடுகளுக்கு 50,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இதன் படி, இதுவரை பேரிடரால் பாதிக்கப்பட்ட 115,757 வீடுகளுக்கு குறித்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பேரிடரால் பாதிக்கப்பட்ட சிறு தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், வவுனியா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 63 சிறு தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு 12.6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.