தனது எதிர்கால செயற்பாட்டை திட்டவட்டமாக அறிவித்தார் விஜய்
அரசியல்தான் தனது எதிர்காலம் என்றும், அது நீண்டகால அரசியல் பயணமாக இருக்கும் என்றும் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் நடத்திய தமிழ்நாடு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தபோது அவர் இதனை தெரிவித்தார். அரசியலுக்கு வரும் முடிவு திடீரென எடுக்கப்பட்டதல்ல என்றும், வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்துடனேயே அரசியல் களத்தில் இறங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
33 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை விட்டு விலகுவது எளிதான முடிவு அல்ல என குறிப்பிட்ட விஜய், கொரோனா காலத்திற்குப் பிறகு அரசியலுக்கு வருவது குறித்து தீவிரமாக ஆலோசித்ததாக தெரிவித்தார். அரசியல்தான் தனது எதிர்காலம் என்றும், தனது அரசியல் பயணம் நீண்ட காலமாக தொடரும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், கரூரில் இடம்பெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் தன்னை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக கூறிய அவர், இப்படியொரு சம்பவம் நடைபெறும் என எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார். அந்த சம்பவம் இன்னும் தன்னை துரத்திக்கொண்டிருப்பதாகவும், நடந்ததை முழுமையாக புரிந்து கொண்டு அதனை மனதில் ஜீரணிக்க தனக்கு நேரம் தேவைப்பட்டதாகவும் கூறினார்.
எல்லா விஷயங்களுக்கும் உடனடியாக எதிர்வினை ஆற்றுவதில்லை என்றும், தன்னால் அனுபவிக்கப்பட்ட விடயங்களை புரிந்து கொள்ள நேரம் எடுத்துக்கொள்வது வழக்கம் என்றும் விஜய் தெரிவித்தார்.
.jpeg)