திருகோணமலையில் உணரப்பட்ட நிலநடுக்கம்
திருகோணமலை நகரம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளில் சற்று முன்னர் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பகுதியில் உள்ள எமது செய்தியாளர் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று மாலை சுமார் 04.00 மணியளவில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, திருகோணமலை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் நில அதிர்வை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
Tags:
இலங்கை செய்தி
