இலங்கையில் நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி, இன்றைய தினம் (29.01.2026) இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணின் விலை 386,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை, 24 கரட் தங்கப் பவுணின் விலை 420,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், இந்தியாவின் சென்னையில் இன்று தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்வடைந்துள்ளது. அங்கு ஒரு சவரன் தங்கத்தின் விலை 9,520 ரூபா உயர்ந்து 1,34,400 ரூபாவாகவும், ஒரு கிராம் தங்கத்தின் விலை 1,190 ரூபா உயர்ந்து 16,800 ரூபாவாகவும் விற்பனையாகி வருகிறது.
மேலும், வரலாற்றில் முதல் முறையாக உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது. அதன்படி, இன்று (29) காலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,579 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதுடன், நேற்று (28) காலை அது 5,164 அமெரிக்க டொலர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)