இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத் தாழ்வுகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின்படி, நேற்று (26) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 397,000 ரூபாயாக விற்பனையாகியிருந்தது. இந்நிலையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 3,000 ரூபாயால் குறைந்து 394,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
அதேவேளை, 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 367,200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 49,250 ரூபாய் ஆகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை, 45,900 ரூபாய் ஆகவும் விற்பனையாகின்றது.
Tags:
இலங்கை செய்தி
.jpeg)