ஒரே நாளில் ரூ.12,000 உயர்ந்த தங்க விலை; நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி
உலக சந்தையில் முதன்முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலரை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை நிலவரப்படி இலங்கையில் 24 கரட் தங்கம் – ஒரு பவுன் ரூ. 397,000, 22 கரட் தங்கம் – ஒரு பவுன் ரூ. 367,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 24 கரட் தங்கம் – ஒரு கிராம் ரூ. 49,625, 22 கரட் தங்கம் – ஒரு கிராம் ரூ. 45,900 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
செட்டியார் தெரு தங்க சந்தைத் தகவல்களின்படி, கடந்த வெள்ளிக்கிழமை 24 கரட் தங்கம் ஒரு பவுன் ரூ. 385,000, 22 கரட் தங்கம் ஒரு பவுன் ரூ. 356,000 என விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை செய்தி
