வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!


இந்த வருடத்தின் கடந்த 8 மாதங்களில் 2,12,302 இலங்கை தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வெளிநாடுகளுக்குச் சென்ற ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1,30,252 பேரும் பெண் தொழிலாளர்கள் 82,050 பேரும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் 5.11 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.