வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை

பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீதான தேவை அதிகரித்ததுடன், அமெரிக்க டொலரின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,800 அமெரிக்க டொலர்களைத் தாண்டி உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பாக நாடி வருவதால் இந்தத் திடீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அமெரிக்க டொலரின் மதிப்பு பலவீனமடைந்து வருவதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.