3 ஆவது மின்சார கட்டண திருத்தம் - பொதுமக்களும் கருத்துக்களை பகிர முடியும்!
இலங்கை மின்சார சபை, 2025ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களில் 6.8% அதிகரிப்பு செய்வதற்கான முன்மொழிவை சமர்ப்பித்துள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
இம்முன்மொழிவை முன்னிட்டு, பொதுமக்களின் எழுத்துப்பூர்வ மற்றும் வாய்மொழி கருத்துக்களைப் பெற ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்காக ஒன்பது மாகாணங்களிலும் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் தொடங்கும் ஒன்பது பொது ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும்.
2025ஆம் ஆண்டின் மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் குறித்த எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் அக்டோபர் 7, 2025க்கு முன் பின்வரும் வழிகளில் அனுப்பப்படலாம்:
மின்னஞ்சல்: info@pucsl.gov.lk
வாட்ஸ்அப்: 0764271030
ஃபேஸ்புக்: www.facebook.com/pucsl
தபால் முகவரி:
மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை - 2025,
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு,
6ஆவது மாடி, சிலோன் வங்கி வர்த்தக கோபுரம்,
கொழும்பு - 03.
Tags:
இலங்கை செய்தி