சடுதியாக வீழ்ச்சியடைந்த முட்டை விலை

 

கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் உள்ளூர் சந்தையில் முட்டை விலையில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்த விடயத்தை அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் முட்டையொன்று சுமார் ரூ.30க்கு விற்பனை செய்யப்படுவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், சில பகுதிகளில் முட்டை ரூ.26 மற்றும் ரூ.28 வரையிலான விலைகளிலும் விற்கப்படுவதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுரசிரி மாரசிங்க தெரிவித்துள்ளார்.