இன்றும் தமிழக மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை


நீலகிரி, தென்காசி, தேனி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் ஜூலை 26-ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். வெயில் மிகையில்லாமல், சீரான சூழல் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆம்பூர் பகுதியில் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

ராணிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கடந்த இரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது.  

ஆற்காடு, வாலாஜாபேட்டை, கலவை, திமிரி, விஷாரம், சோளிங்கர், நெமிலி, பனப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.