தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: வார முதல் நாள் தங்க நிலவரம்
ஜூலை மாதம் தொடக்கம் முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தங்க விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
ஜூலை 19 அன்று, 22 கரட் தங்கம் ஒரு கிராம் ₹9,170 (₹60 உயர்வு) ஆகவும் ஒரு சவரன் ₹73,360 (₹480 உயர்வு) ஆகவும் காணப்பட்டது.
இன்று (ஜூலை 21), 22 கரட் தங்கம் ஒரு கிராம் ₹9,180 (₹10 உயர்வு) ஆகவும் ஒரு சவரன் ₹73,440 (₹80 உயர்வு) ஆகவும் உயர்வடைந்துள்ளது.
18 காரட் தங்கம் ஒரு கிராம் ₹7,560 (₹5 உயர்வு) ஆகவும் ஒரு சவரன் ₹60,480 ஆகவும் உயர்வடைந்துள்ளது.
வெள்ளி விலை ஒரு கிராம் ₹126 (மாற்றமில்லை) ஆகவும் ஒரு கிலோ ₹1,26,000 ஆகவும் உள்ளது.
தங்கம் விலையில் தொடர்ந்து உயர்வு காணப்படுவதால், பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அதிக கவனத்துடன் நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றனர்.
Tags:
இந்திய செய்தி
