மங்களூருவில் தர்மஸ்தலா கோவில் தூய்மை பணியாளர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்: 100க்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டதாக புகார்
கர்நாடகாவின் மங்களூரு நகரத்தில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு தூய்மைப் பணியாளர் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1995 முதல் 2014 வரை பல்வேறு இடங்களில் சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என சுமார் 100 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்ததாகவும், அந்த உடல்களை தனக்குத் தரப்பட்ட பணியின் பெயரில் வெவ்வேறு இடங்களில் புதைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அவர் இந்திய பொது பாதுகாப்பு சட்டத்தின் (BNS) பிரிவு 183 ன் கீழ் ஒரு நீதிபதியின் முன்னிலையில் அதிகாரபூர்வமாக வாக்குமூலமாக பதிவு செய்துள்ளார்.
மேலும், “தன்னை கொலை செய்வதாக மேலதிகாரிகள் மிரட்டியதால் இத்தனை ஆண்டுகள் மௌனமாக இருந்தேன். இனி இந்த குற்ற உணர்வுடன் உயிரோடிருக்க முடியவில்லை” என அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இந்திய செய்தி
