கல்வியமைச்சின் இஸ்லாமிய மத ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் எம்.டி.எம். றிஸ்வி
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்தின் இஸ்லாமிய மத ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக எம்.டி.எம். றிஸ்வி (மஜீதி) நியமனம் பெற்றுள்ளார்.
அவருக்கான, நியமனத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (11) கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின் போது வழங்கி வைத்தார்.
பொலன்னறுவையை பிறப்பிடமாகவும் ஓட்டமாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஆவார்.
Tags:
இலங்கை செய்தி