ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு!
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் கொமர்ஷல் பகுதியில் இன்று (11) ஏற்பட்ட மண்சரிவினால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால், இன்று அதிகாலை ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் உள்ள கொமர்ஷல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.
இதன்காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை அந்த பாதையிலிருந்து மண்ணை அகற்றும் பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை செய்தி