கூரை மீது ஏறி நின்று பூஸா சிறைச்சாலை கைதிகள் போராட்டம்!


பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து கைதிகள் இன்று புதன்கிழமை (18) காலை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்படும் கடுமையான  சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே கைதிகள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸாரின் கடுமையான சோதனை நடவடிக்கைகளுக்கு தீர்வு எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து இன்று (18) காலை முதல்  கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.