பேருந்துகள் மற்றும் லொறி மோதல் – கோர விபத்து; 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் இன்று (26) காலை பயங்கர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு லொறி ஒன்றுடன் ஒன்று மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.