வணிகத் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்


வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்குகின்ற வணிகத் திணைக்களத்தின் வணிகப் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு  மூத்த அதிகாரியான அமீனா சாஃபி மோஹின் அவர்கள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வணிகப் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு முழுநேரப் பதில் கடமையாற்றுவதற்காக நியமிப்பதற்காக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்குகின்ற வணிகத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்துக்கு  இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.