இந்த வருடம் சவூதி மன்னரின் சொந்த நிதியில் 1,000 பலஸ்தீனர்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற வாய்ப்பு!


சவூதி அரேபியாவிலுள்ள இரு புனித ஸ்தலங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூதின், 

சொந்த நிதியில்  1,000 பலஸ்தீனர்கள் இந்த வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.  

இதற்கான உத்தரவு சவூதி அரேபிய மன்னரினால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய ஊடகங்கள் நேற்றைய தினம் (19) திங்கட்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய உயிர்த் தியாகம் செய்தோரின் குடும்பங்கள், கைதிகள் மற்றும் காயமடைந்தோர் என பாதிக்கப்பட்ட 1,000 பலஸ்தீனர்கள் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றவுள்ளனர்.