வெசாக் தினத்தை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும்!
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் இரண்டு நாட்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, மே 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நாட்களில் கலால் சட்டங்களை மீறி செயல்படும் மதுபானசாலைகள் மற்றும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யும் இடங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
