வசதி குறைந்த பாடசாலைகளுக்கென நடைமுறைக்கு வந்துள்ள புதிய வேலைத்திட்டம்!
வசதி குறைந்த பாடசாலைகளின் ஆய்வுகூடங்களை மேம்படுத்த உதவிகளை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இந்த முயற்சியை இலங்கை அறிவியல் மேம்பாட்டுச் சங்கம் முன்னெடுத்து, பிரயோக ரீதியான விஞ்ஞான பரிசோதனைகளுக்குத் தேவையான இரசாயனப் பொருட்களும் உபகரணங்களும் இந்த உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.
"அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் வசதி குறைவானவர்களை வலுப்படுத்துதல்" என்ற இவ்வருடத்திற்கான தொனிப்பொருளின் கீழ், ஆய்வுகூட உதவித் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம், பிரயோக ரீதியான விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ள சவால்களை எதிர்கொண்டுள்ள பாடசாலைகளுக்கு உதவி கிடைக்கும்.
விண்ணப்பிக்க விரும்பும் பாடசாலைகள், தமது அதிபரின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன், எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விளக்கி, உரிய விண்ணப்பப்படிவங்களை 2025 மார்ச் 30ஆம் திகதிக்கு முன்பாக labdonationslaas@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும்.
