இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு!
இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று (மார்ச் 10) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 291.25 ரூபா மற்றும் விற்பனைப் பெறுமதி 299.79 ரூபா ஆக உள்ளன. அதேபோல், ஸ்டெர்லிங் பவுண்ட் (GBP) கொள்முதல் பெறுமதி 374.66 ரூபா மற்றும் விற்பனைப் பெறுமதி 388.75 ரூபா, யூரோ (EUR) கொள்முதல் பெறுமதி 313.87 ரூபா மற்றும் விற்பனைப் பெறுமதி 326.68 ரூபா ஆக உள்ளன.
கனேடிய டொலரின் கொள்முதல் பெறுமதி 201.45 ரூபா மற்றும் விற்பனைப் பெறுமதி 209.99 ரூபா, அவுஸ்திரேலிய டொலரின் கொள்முதல் பெறுமதி 181.86 ரூபா மற்றும் விற்பனைப் பெறுமதி 191.16 ரூபா ஆக பதிவாகியுள்ளன.
இதன் மூலம், இலங்கை ரூபாயின் மதிப்பு சிறிதளவு உயர்வடைந்துள்ளமை முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதப்படுகிறது.
Tags:
தொழிநுட்பம்
