நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டிற்கு புதிய தீர்வு
நாடளாவிய ரீதியில் 2 இலட்சம் குடும்பங்களுக்கு 4 இலட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
குடும்ப அடிப்படையிலான தெங்கு உற்பத்தியை அதிகரிக்க குறிக்கோள் வைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த திட்டம் கீழ், குடும்பங்கள் தங்களுடைய தேவைக்கேற்ப தென்னங்கன்றுகளைக் கோர முடியும் என சபை தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்தார்.
அத்துடன், இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தேங்காய் விலை அதிகரித்தல் மற்றும் தென்னை உற்பத்தியின் வீழ்ச்சியை எதிர்கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.