சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து பயிற்சி வகுப்புகளுக்கும் தடை!


சாதாரண தரப் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு மார்ச் மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் அனைத்து பயிற்சி வகுப்புகளும் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், சமூக ஊடகங்கள் மற்றும் பிற இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் வழங்கப்படும் எந்தவொரு பயிற்சிகளுக்கும் இந்தத் தடை பொருந்தும்.

2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 முதல் 26 வரை 3663 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

பாடசாலை மாணவர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் அவர்களின் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன, அதேவேளை தனியார் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.