புலமைப்பரிசில் பரீட்சை – பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு


நாடளாவிய ரீதியில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில், அடுத்த ஆண்டு 6ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் சேர்க்கப்படுவதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில், மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் பாடசாலைகளை https://g6application.moe.gov.lk/#/ என்ற இணையதளத்தில் பிரவேசித்து பார்வையிட முடியும்.

மேலும், 2024 ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்கள் தகுதி பெற்றிருந்தாலும், இந்த வெட்டுப்புள்ளிகள் மற்றும் பிற நியாயமான காரணங்களுக்காக தங்களுக்கான பாடசாலையை மாற்ற விரும்பும் மாணவர்கள், எதிர்காலத்தில் இணையவழி (Online) ஊடாக மட்டுமே மேன்முறையீடு செய்ய முடியும். மேன்முறையீடுகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு பின்னர் அறிவிக்கப்படும்.

அனைத்து மேன்முறையீடுகளும் இணையவழி மூலம் மட்டுமே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சிற்கு அனுப்பப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.