தங்கநகை வாங்கவுள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல்
இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இன்றைய (14.03.2025) நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 883,842 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்கம் (1 கிராம்) 31,180 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில், 24 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) 249,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கம் (1 கிராம்) 28,590 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) 228,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கம் (1 கிராம்) 27,290 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 21 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) இன்றைய தினம் 218,300 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை செய்தி