பாடசாலை மாணவர்களுக்கான 6,000 ரூபா மதிப்புள்ள வவுச்சர் - செல்லுபடியாகும் காலம் நீடிப்பு...
பாடசாலை மாணவர்களுக்கு எழுதுபொருள் வாங்குவதற்காக அரசாங்கம் வழங்கும் 6,000 ரூபா மதிப்புள்ள வவுச்சர் நாளை (15) காலாவதியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது அவற்றின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பினை கல்வி அமைச்சகம் ஒரு அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
