இன்று நள்ளிரவு முதல் க.பொ.த சாதாரண தர மேலதிக வகுப்புகளுக்கு தடை!


2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகளும் இன்று (11) நள்ளிரவுக்குப் பிறகு நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தடையை மீறி மேலதிக வகுப்புகள் நடத்தப்பட்டால், பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்குமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தகவல் வழங்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:

  • பொலிஸ் தலைமையகம் – 011 242 1111
  • பொலிஸ் அவசர இலக்கம் – 119
  • இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் – 1911
  • பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளை – 011 278 4208 / 011 278 4537

கடந்த மார்ச் 7ஆம் திகதி, பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பின்படி, சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற மின்னணு ஊடகங்கள் மூலம் உதவி வழங்குதல் அனைத்தும் மார்ச் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17ஆம் திகதி ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.