எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை நேர காலத்துடன் முடிக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தல்!
இன்று கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – 2024 (2025) ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை நேர காலத்துடன் முடித்துக் கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
முஸ்லிம் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை நிலைய முஸ்லிம் உத்தியோகத்தர்களின் வசதி கருதியே திணைக்களம் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது.
21.03.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விஞ்ஞான (34) பாட வினாத்தாள் பகுதி I பி.ப. 2.00 மணி தொடக்கம் பி.ப. 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
அன்றைய தினம் ஜும்ஆ பிரசங்கமும் ஜும்ஆ தொழுகையும் நடைபெறுவதனால் ஜும்ஆ பிரசங்கத்தையும் ஜும்ஆ தொழுகையையும் முடியுமான வரை முஸ்லிம் பரீட்சார்த்திகளினதும் பரீட்சை நிலைய முஸ்லிம் உத்தியோகத்தர்களினதும் வசதி கருதி நேர காலத்துடன் முடித்துக் கொள்ளுமாறு சகல பள்ளிவாசல் நிருவாக சபையினருக்கும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Tags:
இலங்கை செய்தி

