நாளையிலிருந்து நாடு தழுவிய ரீதியில் சுகாதார ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு!


சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கம் ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (18) காலை 7 மணி முதல் 24 மணி நேர வேலைநிறுத்தத்தை நடத்த தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சுடன் இடம்பெறற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இத்தீர்மானம் சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் நிதி அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த காரணத்தினாலேயே எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.