இலங்கையில் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்போருக்கு சட்டபூர்வமாக திருமணம் செய்துவைக்க நடமாடும் சேவை
இலங்கையில் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த ஒரு குழுவை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளச் செய்வதற்கான நடமாடும் சேவை நேற்று (12) தெனியாயவில் நடைபெற்றது.
இந்த திட்டத்தில் 500 பேர் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம், குழந்தைகள் பெற்று குடும்பமாக வாழ்ந்த பலர் சட்டரீதியாக திருமணம் செய்து கொண்டனர்.
மேலும், இதுபோன்ற பல குடும்பங்களுக்கு திருமண சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அடையாள அட்டை மற்றும் பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அவை வழங்கப்பட்டன.
Tags:
இலங்கை செய்தி
