இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்


இயற்கை எரிவாயுவின் விலையானது சர்வதேச சந்தையில் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் 4.02 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அதே நேரத்தில், இன்று சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதற்கமைவாக WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.51 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.85 அமெரிக்க டொலராக நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.