யாழில் தொழில் தேடுவோருக்காக வெளியான அறிவிப்பு
யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் ஸ்ரீமோகன், இன்று (08.03.2025) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தொழிற் சந்தை நிகழ்வில் கலந்துகொண்டு, தொழில் தேடுவோர் தங்கள் திறமைகளைப் பயன்படுத்தி வெற்றிகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது: "யாழ். மாவட்டத்தில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து, தமக்கான கல்வித் தகுதிகளுக்கேற்ப தொழில் தேடும் இளைஞர் யுவதிகள் இந்த தொழிற் சந்தையை தங்களுக்கேற்ற வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தொழில் வழங்குநர்கள் மற்றும் தொழில் தேடுவோரை இணைத்து, இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புகளை வழங்கும் ஒரு களமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
இந்த வாய்ப்பினை எமது பகுதி தொழில் தேடுநர்கள் தமது எதிர்காலம் கருதியதாக பயன்படுத்தி வெற்றிகாண வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
