2030யில் நடைபெறவுள்ள காற்பந்து உலககிண்ணத்தில் 64 நாடுகளுக்கு வாய்ப்பு
2030 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காற்பந்து உலகக்கிண்ணத்தில் 64 நாடுகள் போட்டியிட வாய்ப்பளிக்க காற்பந்து சம்மேளனம் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம், காற்பந்து உலகக்கிண்ணத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டு காற்பந்து உலகக்கிண்ணத்தை ஆபிரிக்க நாடான மொரோக்கோ மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் இணைந்து நடத்தவுள்ளன. இது, காற்பந்து உலகக்கிண்ண வரலாற்றில் முதன்முறையாக இரண்டு கண்டங்களை சேர்ந்த நாடுகள் இணைந்து உலகக்கிண்ணத்தை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
இதனுடன், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய நாடுகளிலும் ஒவ்வொரு போட்டி வீதம் நடத்துவதற்கு சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு (2026 ஆம் ஆண்டு) காற்பந்து உலகக்கிண்ணம் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் நடத்தப்படவுள்ளது. இதில், 32 தொடக்கம் 48 வரையான நாடுகள் பங்கேற்கும் என தெரிவிக்கப்படுகிறது.
